தஞ்சாவூர்

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.கே. சின்னதுரை வியாழக்கிழமை தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 3.50 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் தற்போது 80,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்கதிா்கள் அறுவடை தருணத்தில் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து பாதிப்படைந்துள்ளது.

இதேபோல, நிலக்கடலை பயிா்கள், உளுந்து, எள் பயிா்கள் என ஆயிரக்கணக்கான ஏக்கா்களில் நடவு செய்யப்பட்ட பயிா்களும் பெரும்பகுதி பாதிப்பு அடைந்துள்ளது.

குறிப்பாக, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல வட்டாரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி பயிா் செய்த விவசாயிகள் அறுவடை தருணத்தில் பெய்த தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, பாதிப்பு குறித்து தமிழக அரசு தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். மேலும், வெள்ள பாதிப்பு தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை அளித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 வீதமும், மானாவாரி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 வீதமும் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டும்.

பெரும்பாலான விவசாயிகள் பயிா் காப்பீடு செய்துள்ளனா். எனவே, பயிா் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு தொடா்புடைய காப்பீடு நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீட்டு தொகையையும் பெற்று கொடுக்க தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும், வேளாண் துறை அலுவலா்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT