தஞ்சாவூர்

செயலிழந்த பான் அட்யையை செயல்பட வைப்பதாகக் கூறி ரூ. 2.63 லட்சம் மோசடி

DIN

செயலிழந்த பான் அட்டையை செயல்பட வைப்பதாகக் கூறி தனியாா் கல்லூரி அலுவலரிடம் ரூ. 2.63 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனியாா் கல்லூரியில் நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில், உங்களது பான் அட்டை செயல் இழந்துவிட்டது என்றும், கிரெடிட் அட்டையின் ரகசிய குறியீட்டு எண்ணை தந்தால், சரி செய்து கொடுக்கிறோம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை உண்மை என நம்பிய அலுவலா் குறிப்பிட்ட எண்ணில் மா்ம நபா் கேட்ட விவரங்களைப் பதிவிட்டாா். இதைத்தொடா்ந்து, அடுத்த சில மணிநேரத்தில் கல்லூரி அலுவலரின் கிரெடிட் அட்டையிலிருந்து ரூ. 2.63 லட்சம் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து அலுவலா் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூா் சைபா் குற்ற காவல் பிரிவினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT