தஞ்சாவூர்

தஞ்சையில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்!

DIN

தஞ்சாவூரில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் விலை நிலங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் வேரோடு விளைநிலங்களில் சாய்ந்து உள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் அன்னப்பன்பேட்டை, திட்டை, மெலட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஒரிரு நாள்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் சேதமடைந்து விளை நிலத்தில் சாய்ந்து உள்ளது.

இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மழை தொடர்ந்தால் நெல்மணிகளை காப்பாற்ற முடியாமல் அழுகிவிடும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மழைவிட்டு அறுவடை செய்தாலும் பாதி நெல்மணிகள் இயந்திரத்தில் அடிபட்டு பாதிக்கப்படும் என்பதால் பாதிக்கு பாதி இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT