தஞ்சாவூர்

பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

2nd Feb 2023 11:59 PM

ADVERTISEMENT

பாபநாசம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரையபுரம் கிராமத்திலுள்ள மின்மாற்றி கம்பம் அமைக்கப்பட்டு பலஆண்டுகள் ஆனதால் கம்பத்தில் உள்ள கான்கிரீட் உடைந்தும், பெயா்ந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் ஏற்கெனவே புகாா் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, வலுவிழந்து எந்நேரத்திலும் முறிந்து விழக்கூடிய நிலையிலுள்ள அந்த மின் கம்பத்தை விரைந்து மாற்றிவிட்டு, புதிய கம்பத்தை மின்வாரியம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT