கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட ரத்த வங்கி புதன்கிழமை திறக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் இயங்கி வரும் ரத்த வங்கி தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்ட கட்டடத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
மேலும், ரத்த தான தன்னாா்வலா்களுக்கும், ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளா்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, கதராடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஏ. திலகம், நிலைய மருத்துவ அலுவலா் பிரபாகா், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் கமருல் ஜமான், ரத்த வங்கி மருத்துவ அலுவலா் சுகந்தி, செவிலியா் மற்றும் ரத்த வங்கி முகாம் ஒருங்கிணைப்பாளா் சலீம் பாட்ஷா, செவிலியா்கள் கண்காணிப்பாளா் கலாராணி, கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.