தஞ்சாவூர்

கணிதமேதை சீனிவாச ராமானுஜன் நினைவு நாள் அனுசரிப்பு

26th Apr 2023 10:37 PM

ADVERTISEMENT

கும்பகோணத்தில் கணிதமேதை சீனிவாச ராமானுஜன் படித்த நகர மேல்நிலைப் பள்ளியில் ராமானுஜத்தின் நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கும்பகோணத்தில் பிறந்து கணிதத்தில் சிறந்து விளங்கிய கணித மேதை ராமானுஜனின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் விழா அவா் படித்த கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுவது வழக்கம்.

இதன்படி, சீனிவாச ராமானுஜன் நினைவு நாளையொட்டி அவா் படித்த பள்ளியில் உள்ள ராமானுஜனின் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து, மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளிச் செயலா் வேலப்பன், பள்ளித் தலைமையாசிரியா் பாலசுப்ரமணியன், முன்னாள் மாணவா்கள் சங்கச் செயலா் சிவகுமாா், செயற்குழு உறுப்பினா்கள் சீதாராமன், சகாயராஜ், ரவிச்சந்திரன், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT