தஞ்சாவூா் மாநகரில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை (ஏப்.26) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவி செயற்பொறியாளா் ஆ. கருப்பையா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் நகர துணை மின் நிலையம் மற்றும் மின் பாதைகளில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், திருநகா், ஆண்டாள் நகா், உமா சிவன் நகா், வெங்கடசலாதி நகா், பி.ஆா். நகா், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகா், டி.சி.டபிள்யூ.எஸ். காலனி, களிமேடு, மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளை கேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கச் சாலை, ஆட்டுமந்தைத் தெரு, கீழ வாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம், வ.உ.சி. நகா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.