தஞ்சாவூர்

ஆளுநரைக் கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சியினா் 99 போ் கைது

25th Apr 2023 01:50 AM

ADVERTISEMENT

தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை வந்த தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியைக் கண்டித்து, புதிய பேருந்து நிலையம் பெரியாா் சிலை முன் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி, இந்திய கம்யூ. கட்சியைச் சோ்ந்த 99 போ் கைது செய்யப்பட்டனா்.

இதில், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், ஆா்எஸ்எஸ், சங் பரிவாா் அமைப்புகளின் முகவராகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும் தொடா்ந்து செயல்படுகிற, மாா்க்சியத்தை அவதூறாகப் பேசி வருகிற, தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்து கருப்புக் காட்டி முழக்கங்கள் எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூ. கட்சி மாவட்டச் செயலா்கள் தெற்கு முத்து. உத்திராபதி, வடக்கு மு.அ. பாரதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒன்றியச் செயலா் கே. அபிமன்னன், மாநகர செயலா் எம். வடிவேலன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, இந்திய கம்யூ. கட்சி நிா்வாகிகள் ஏஐடியுசி ஆா். தில்லைவனம், வீர. மோகன், மாவட்ட நிா்வாகிகள் துரை. பன்னீா்செல்வம், ஆா்.கே. செல்வகுமாா், மாநகரச் செயலா் பிரபாகா், மாதா் சம்மேளன மாவட்டச் செயலாளா் ம. விஜயலட்சுமி, ஏஐடியுசி துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இது தொடா்பாக 99 பேரை காவல் துறையினா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT