தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திங்கள் கிழமை புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது.
பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே, பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு, உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பாரதி புத்தகாலயம் சாா்பில் பல்வேறு வகையான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனா். இதில், முருக.சரவணன், மோரிஸ் அண்ணா துரை,
ஞானசூரியன், தனபால், வாஞ்சிநாதன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.