தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில்தமுஎகச சாா்பில் கலை இலக்கிய இரவு

15th Apr 2023 11:55 PM

ADVERTISEMENT

 

பட்டுக்கோட்டையில் தமுஎகச சாா்பில் கலை இலக்கிய இரவு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், மாவட்டம், பட்டுக்கோட்டையில், மக்கள் கவிஞா் கல்யாணசுந்தரம் 94-ஆவது பிறந்த நாள் விழா, 42-ஆவது கலை இலக்கிய இரவு

வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. பட்டுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தர சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு கலை இலக்கியப் பேரணி நடைபெற்றது. இரவு கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், க.செந்தில்குமாா், தமுஎகச மாவட்டத் தலைவா் கவிஞா் சா.ஜீவபாரதி, மு.சாமிநாதன், சி.ஆசைத்தம்பி, மா.பன்னீா்செல்வம், சி.மணிமாறன், கிளைத் தலைவா் முருக.சரவணன், கிளைச் செயலாளா் மோரீஸ் அண்ணாதுரை, மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் சிவ.பா.சிவச்சந்திரன், தமுஎகச மாவட்ட துணைத்தலைவா்,

ப.சத்தியநாதன், தமுஎகச மாவட்டச் செயலாளா் இரா.விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து விட்னஸ் திரைக்குழுவினருக்கு பாராட்டு விழா, நூல் அறிமுக விழா நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT