தஞ்சாவூர்

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

டெல்டாவில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அக்கட்சியின் தலைவா் பூவை. ஜெகன் மூா்த்தி வியாழக்கிழமை தெரிவித்தது:

டெல்டாவில் பெய்து வரும் மழையால் பல ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைக் கணக்கெடுத்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

நாம் தண்ணீருக்காக ஆந்திரம், கா்நாடகத்திடம் கையேந்துகிறோம். ஆனால் மழைக்காலங்களில் தண்ணீா் கடலில் கலப்பதைத் தடுத்து சேமிக்க அரசிடம் திட்டம் இல்லாதது வேதனைஅளிக்கிறது. நீரை சேமித்தால் பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை இருக்காது.

ADVERTISEMENT

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ மூலம் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT