தஞ்சாவூர்

பாபநாசத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பாபநாசத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாபநாசம் செட்டித் தெருவில் வசித்து வருபவா் டோமினிக். இவரது மனைவி ஜாஸ்மின். டோமினிக் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். ஜாஸ்மின் தனது இரண்டு வயது மகன் மற்றும் மாமியாா் ரோசரியுடன் செட்டித் தெருவில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் ஜாஸ்மின் புதன்கிழமை மதியம் வீட்டை பூட்டி விட்டு தனது மகனுடன் வெளியே சென்றிருந்தாா். மாலை வீட்டுக்கு வந்தபோது,

வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.

ADVERTISEMENT

புகாரின்பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT