தஞ்சாவூர்

விழிப்புணா்வு பிரசாரம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அம்மாபேட்டை பேரூராட்சி சாா்பில் அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற வளாகம், பேருந்து நிலையம், கே.ஆா்.கே. தெரு ஆகிய மூன்று இடங்களில் வியாழக்கிழமை பொது சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

பிரசாரத்தை அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் ஷோபா ரமேஷ் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். துணைத் தலைவா் தியாக ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், பொதுமக்கள் துணிப்பைகளையே உபயோகப்படுத்த வேண்டும், எனவும், வீடுகள் தோறும் சேரும் குப்பைகளை பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்குவதற்கான செயல்முறை விளக்கம் செய்து காண்பித்து அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வாா்டு உறுப்பினா்கள், அலுவலக இளநிலை உதவியாளா் முருகானந்தம் உள்ளிட்ட அலுவலா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா் கணேசன் உள்ளிட்ட துப்புரவு பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக, பேரூராட்சி செயல் அலுவலா் இரா. ராஜா வரவேற்றாா், நிறைவில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் மோகன்தாஸ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT