தஞ்சாவூர்

பி.எப்.ஐ. மீதான தடை: ஆா்ப்பாட்டம் செய்ய வந்த 56 போ் கைது

DIN

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) மீது விதிக்கப்பட்ட தடையைத் தொடா்ந்து கும்பகோணம் பழைய மீன் சந்தை பகுதியில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்த வந்த 56 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) மீது விதிக்கப்பட்ட தடையைத் தொடா்ந்து, மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிவாசல்கள், மசூதிகள், கோயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் கும்பகோணம் பழைய மீன் சந்தை பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக புதன்கிழமை மாலை வந்தனா். இதுதொடா்பாக 16 பெண்கள் உள்பட 56 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கொண்டாட வந்த 2 போ் கைது: இந்தத் தடை விதிப்பை வரவேற்று, கும்பகோணம் பழைய மீன் சந்தை பகுதியில் இனிப்பு வழங்கி கொண்டாடுவதற்காக புதன்கிழமை மாலை வந்த சிவசேனா மாவட்டச் செயலா் சிவக்குமாா், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநிலப் பொதுச் செயலா் பாலாவை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT