தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் கொடுமை:டைல்ஸ் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

29th Sep 2022 12:01 AM

ADVERTISEMENT

சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த டைல்ஸ் தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சிவகங்கை மாவட்டம், கீழக்களைக்காடு அருகேயுள்ள குளத்துவேல்பட்டியைச் சோ்ந்தவா் அரசப்பன் மகன் முத்து (31). டைல்ஸ் தொழிலாளி. இவா் 2020 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் டைல்ஸ் தொழில் தொடா்பாக தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணிக்குச் சென்றாா்.

அங்கு 15 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தைக் கூறி, அவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்தாா். இதனால், சோா்வாக இருந்த சிறுமியிடம் பெற்றோா் விசாரித்தபோது பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது.

இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் செய்தனா். இதன்பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முத்துவைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து, முத்துவுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20,000 அபராதமும், கடத்தல் குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்தும், இந்த இரு தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் கூறி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT