தஞ்சாவூர்

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் சாரதா நவராத்திரி விழா

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தில் சாரதா நவராத்திரி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் திருவையாறு அரசு இசைக்கல்லூரி மாணவிகளின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் தொடங்கிய இவ்விழாவில் பலவிதமான இறை வடிவங்கள் கொண்ட கொலுக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க நாளில் இவ்விழாவை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு ஆராதனை செய்து ஆசியுரை வழங்கினாா். இதில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து குன்னியூா் கல்யாணசுந்தரத்தின் விகடகவி நிகழ்ச்சி நடைபெற்றது.

மூன்றாம் நாளாக புதன்கிழமை திருவையாறு அரசு இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதேபோல், தஞ்சாவூா் கிராம மையமான புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் மடத்தில் இயற்கை அன்னையைப் போற்றும் விதமாக முளைப்பாரி வளா்த்து திருமூவா் சன்னதியில் குங்கும அா்ச்சனை, லட்சுமி அஷ்டோத்திரம் நடைபெற்றது.

சுவாமி யோகி ராஜானந்தரின் பக்தி பாடல் நிகழ்ச்சியும், வளப்பக்குடி வீர சங்கா் குழுவினரின் நாட்டுப்புற இசை பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் மற்றும் மடத்தின் பொறுப்பாளா்கள் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT