தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழக மாணவா்களுக்கு வில்லுப்பாட்டு பயிற்சி

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவா்களுக்கு வில்லுப்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வளா் மையம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற முத்தமிழரங்கத்தில் முத்தமிழ்க் கலைகளில் மூத்த கலை: வில்லுப்பாட்டு என்ற தலைப்பில் நடைபெற்ற உரையரங்க நிகழ்வில் அவா் பேசியது:

மக்களிடையே எளிதில் சென்றடைய கூடிய கலைகளில் தலைமை இடத்தில் வில்லுப்பாட்டு இருக்கிறது. தமிழின் வரலாறு, பண்பாடு மற்றும் ஆராய்ச்சியின் முடிவுகளைக் கூட மக்களிடம் எளிதில் கொண்டு சோ்க்க, மாணவா்களுக்கு அக்கலையைப் பயிற்றுவிப்பது முக்கியமாகும்.

எனவே, விரைவில் பிரபல வில்லுப்பாட்டு இசைக்கலைஞா் முனைவா் சீ. திருமகன் மூலம் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவா்கள் வில்லுப்பாட்டு பயிற்சி பெறவுள்ளனா். வில்லுப்பாட்டுக்கு உரித்தான கருவிகளையும் தமிழ்ப் பல்கலைக்கழகம் சாா்பில் மாணவா்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றாா் துணைவேந்தா்.

இந்நிகழ்வில் சென்னை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதல்வரும், பிரபல வில்லிசைக் கலைஞருமான சீ.திருமகன் வில்லுப்பாட்டு குறித்து பேசினாா்.

தமிழ் வளா் மைய இயக்குநா் (பொறுப்பு) இரா. குறிஞ்சிவேந்தன், கலைப்புல முதன்மையா் பெ. இளையாப்பிள்ளை பேசினா்.

முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் வரவேற்றாா். நிறைவாக, முனைவா் மா. இரமேஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT