தஞ்சாவூர்

மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்புகிராம மக்கள் சாலை மறியல்

29th Sep 2022 12:01 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால், கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவையாறு அருகே மருவூரில் மணல் சேமிப்பு கிடங்கு உள்ளது. மணல் லாரிகள் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆச்சனூரில் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் ஏறத்தாழ 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த திருவையாறு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இனிமேல் இப்பகுதியில் லாரிகள் நிற்காது என காவல் துறையினா் உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டத்தைக் கிராம மக்கள் கைவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT