தஞ்சாவூர்

பகத்சிங் பிறந்த நாள் விழா உறுதி ஏற்கும் நிகழ்ச்சி

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணம் ஏஐடியுசி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங் பிறந்த நாள் விழா உறுதியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் ச. இலங்கேஸ்வரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, கும்பகோணம் ஒன்றியச் செயலா் ஏ.ஜி. பாலன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளா் ஐ. ஜாா்ஜ், பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் க. திவான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT