தஞ்சாவூர்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்தவா் மருதமுத்துவின் மனைவி பூவாயி (29). இவா் அண்மையில் நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இவரது கழுத்தில் இருந்த 10 கிராம் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT