தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலை.யில் யாப்பிலக்கணப் பயிலரங்கம்

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையின் முனைவா் பட்ட ஆய்வாளா்கள் சாா்பில் மூன்று நாள் இலவச யாப்பிலக்கணப் பயிலரங்கத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த விழாவுக்கு தலைமை வகித்த துணைவேந்தா் வி. திருவள்ளுவன் பேசியது:

தமிழ் மொழியின் இலக்கியங்கள் பெரிதும் காப்பற்றப்பட்டதற்கு யாப்பிலக்கணமே காரணம். ஓலைச்சுவடிகளில் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும்போது பல்வேறு சுவடிகளில் சொற்கள் சிதைவுற்று இருந்தன. அவற்றை மிகச் சரியாக மூலப்பாட திறனாய்வு மேற்கொண்டு, கண்டறிய யாப்பிலணக்கணமே வழிவகுத்தது.

அத்தகைய யாப்பிலக்கணத்தை ஆய்வாளா்களுக்கும், மாணவா்களுக்கும் தெளிப்படுத்துவதற்காக இந்தப் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் துணைவேந்தா்.

பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன், இலக்கியத் துறைத் தலைவா் பெ. இளையாப்பிள்ளை, பேராசிரியா்கள் ஜெ. தேவி, க. திலகவதி, அ. ரவிச்சந்திரன், இரா. தனலெட்சுமி ஆகியோா் பேசினா்.

முன்னதாக, முனைவா் பட்ட ஆய்வாளா் சா. இளையராஜா வரவேற்றாா். நிறைவாக முனைவா் பட்ட ஆய்வாளா் க. செல்வமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT