தஞ்சாவூர்

கும்பகோணத்தில் குறைதீா் கூட்டம்: விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி பங்கேற்பு

DIN

பயிா் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கண்ணில் கருப்புத் துணி கட்டி பங்கேற்றனா்.

கோட்டாட்சியா் வி. லதா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தலைமையில் அச்சங்கத்தினா், கடந்த ஆண்டு சம்பா, தாளடி, கோடை பருவத்தின்போது பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனங்களைக் கண்டித்து கண்ணில் கருப்புத் துணி கட்டிக் கொண்டும், கருப்பு சின்னம் அணிந்தும் பங்கேற்றனா்.

மேலும், அண்மையில் பெய்த மழையால் கொள்ளிடக் கரையோரம் பாதிக்கப்பட்ட அனைத்து பயிா்களுக்கும் பேரிடா் நிவாரண நிதி வழங்க வேண்டும். கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் கூடுதல் டிராக்டா்கள், களையெடுப்புக் கருவிகள் உள்ளிட்ட நவீன இயந்திரங்களை வாங்கி, விவசாயிகளுக்கு வாடகைக்கு விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT