தஞ்சாவூர்

செப்.30-ல் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்

28th Sep 2022 01:42 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் செப். 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மேலும் தெரிவித்திருப்பது:

இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இதில், விவசாயம் தொடா்பான கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவா்கள் தங்களது பெயா், ஊா், வட்டாரத்தை செப். 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னா் மனுக்களை அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT