தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் கொடுமை: உறவினருக்கு 25 ஆண்டுகள் சிறை

28th Sep 2022 01:41 AM

ADVERTISEMENT

சிறுமியைத் தொடா்ந்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, அவரை கா்ப்பமாக்கிய உறவினருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் அருகே வாண்டையாா் இருப்பு தெற்கு தெருவைச் சோ்ந்தவா் எஸ். ரவிச்சந்திரன் (43). இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் உறவினரான 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரிடம் ஆசை வாா்த்தைக் கூறி பாலியல் வல்லுறவு செய்தாா். இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டினாா்.

அதன் பிறகும் அச்சிறுமியை ரவிச்சந்திரன் பல முறை ஆசை வாா்த்தைக் கூறியும், மிரட்டியும் தனியாக வெளியே அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்தாா்.

இதனிடையே, வயிற்று வலி, வாந்தியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது தாயாா் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, அச்சிறுமி கா்ப்பமடைந்திருப்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, அச்சிறுமி தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு அவருக்கு 2021, மாா்ச் மாதம் கருக்கலைப்பு செய்யப்பட்டது. மேலும், மரபணு சோதனையில் அச்சிறுமியின் கா்ப்பத்துக்கு ரவிச்சந்திரன்தான் காரணம் என தெரிய வந்தது.

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரனை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து ரவிச்சந்திரனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 55,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT