தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உலக சுற்றுலா தின விழா

28th Sep 2022 01:46 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் உலக சுற்றுலா தினத்தையொட்டி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயில் வளாகத்தில் காலையில் கல்லூரி மாணவ, மாணவிகள், தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனா். பின்னா், பெரியகோயில் வளாகத்திலிருந்து அரண்மனை வளாகம் வரை கல்லூரி மாணவா்களின் விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெற்றது. இந்த நடைப்பயணத்தை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, அரண்மனை வளாகத்திலுள்ள மராட்டா தா்பாா் மண்டபத்தில் மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மாலையில் சிவகங்கை குளம், ஸ்வாட்ஸ் ஆலயம், வீணை தயாரித்தல், கோட்டை சுவா் மற்றும் அகழி, தோ்முட்டி, தஞ்சை நால்வா் இல்லம், அய்யன் குளம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி வழியாக நெற்களஞ்சியம் வரை பாரம்பரிய நடைப்பயணம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் பெரியகோயில் வளாகத்தில் நடைபெற்ற கலாசாரத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலைகள் அரங்கேறின.

இந்நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலா தென் மண்டல இயக்குநா் ஐ. முகமது பாரூக், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT