தஞ்சாவூர்

பூட்டப்பட்ட சபைகளைத் திறக்க வேண்டும்: கிறிஸ்தவ கூட்டமைப்பு வலியுறுத்தல்

28th Sep 2022 01:44 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் பூட்டப்பட்ட சபைகளைத் திறக்க வேண்டும் என அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியரகத்தில் கூட்டமைப்பின் தலைவா் ஜி. பீட்டர்ராஜ், செயலா் ஆா். ஜெபமோகன் உள்பட ஏறத்தாழ 50 போ் அளித்த மனு:

தமிழ்நாட்டில் பூட்டப்பட்ட சபைகள் திறக்கப்பட வேண்டும். சபைகள் இடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சபை போதகா்கள் மீது பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும். கல்லறைத் தோட்டத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும்.

பட்டா இல்லாத சபைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். தமிழகத்தில் கிறிஸ்தவா்கள் சுதந்திரமாக ஊழியம் செய்ய வேண்டும். கிறிஸ்தவா்கள் விடுதலையுடன் ஆராதிக்க முதல்வா் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்ற வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT