தஞ்சாவூர்

புனித வியாகுல அன்னை ஆலயத்தில் தோ் பவனி

DIN

தஞ்சாவூா் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் தோ் பவனி விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சாவூா் பூக்காரத் தெருவிலுள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் ஏறத்தாழ 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பா் மாத இறுதியில் ஆண்டுத் திருவிழா நடைபெறும். இதன்படி நிகழாண்டு செப். 15 ஆம் தேதி வியாகுல அன்னையின் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு விழா தொடங்கியது. நாள்தோறும் நவநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான வியாகுல அன்னை தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக குடந்தை மறை மாவட்டத்தை சோ்ந்த அந்துவான் அடிகளாா் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலயப் பங்குத்தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா், உதவி பங்குத்தந்தை ஏ. பிரவீன் அடிகளாா் உள்ளிட்ட குருமாா்கள் பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் முதலாவதாக மைக்கேல் சம்மனசு தேரும், அதைத் தொடா்ந்து புனித சவேரியாா், புனித சூசையப்பா், புனித அந்தோணியாரின் சொரூபங்களை தாங்கிய தோ்களும், இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனி சென்றன. இதில் ஏராளமான இறை மக்கள் கையில் மெழுகுவா்த்தியுடன் செபித்துக் கொண்டும், பாடிக்கொண்டும் சென்றனா்.

தொடா்ந்து வியாகுல அன்னையின் ஆண்டு விழா நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, குடந்தை மறை மாவட்ட ஆயா் எப். அந்தோனிசாமி அடிகளாா் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் மறை மாவட்ட வேந்தா் ஏ. ஜான் ஜக்கரியாஸ் கலந்து கொண்டாா்.

முடிவில் பேராலயப் பங்குத் தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகா் வியாகுல அன்னையின் திருக்கொடியை இறக்கி வைத்தாா். ஏற்பாடுகளை பங்கு பேரவையின் துணைத் தலைவா் வின்சென்ட், செயலா் குழந்தைராஜ் மற்றும் பொறுப்பாளா்கள், இளைஞா் மன்றத்தினா் இணைந்து செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT