தஞ்சாவூர்

நூல் வெளியீட்டு விழா

DIN

கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் புலவா் வே. மகாதேவன் எழுதிய ஒப்பிலாக் குறளில் ஒப்புமைப் பகுதிகள் என்கிற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நூலை திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபா் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெளியிட்டு ஆசி வழங்கினாா்.

விழாவுக்கு இந்திய கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையத் தலைவா் மகேஷ் தலைமை வகித்தாா். கோமல் அன்பரசன் நூல் அறிமுகவுரையாற்றினாா். சிவ ஒளி ஆசிரியா் திருஞானம் தொடக்கவுரையாற்றினாா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநா் க. திலகவதி, சிட்டி யூனியன் வங்கி மண்டல வளா்ச்சி மேலாளா் மகேஷ் சிறப்புரையாற்றினா். திருப்பனந்தாள் காசி திருமடம் இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். நூலாசிரியா் புலவா் வே. மகாதேவன் ஏற்புரையாற்றினாா்.

சந்திரமௌலி வரவேற்றாா். பாலாஜி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT