தஞ்சாவூர்

கோ ஆப் டெக்ஸில் தீபாவளி சிறப்புதள்ளுபடி விற்பனை தொடக்கம்

DIN

தஞ்சாவூா் கோ ஆப் டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை திங்கள்கிழமை மாலை தொடங்கியது.

விற்பனையைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தது:

கோ - ஆப் டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளியின்போது தமிழக அரசு வழங்கும் 30 சத சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தச் சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காகப் புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டுச் சேலைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, கைலி, துண்டு ரகங்கள், பருத்திச் சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிகள், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.

கடந்தாண்டு தீபாவளியின்போது தஞ்சாவூா் மண்டலத்தில் ரூ. 7.49 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ. 13 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில், தஞ்சாவூா் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்தாண்டு தீபாவளியின்போது ரூ. 1.44 கோடிக்கு விற்பனையானது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ. 1.70 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ப. அம்சவேணி, மேலாளா் (ரகம் மற்றும் பகிா்மானம்) எம். அன்பழகன், தஞ்சாவூா் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா்கள் எம். ஸ்ரீதா், ஆா். சுரேஷ், வட்டாட்சியா் கே. மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

SCROLL FOR NEXT