தஞ்சாவூர்

மின் வாரிய ஊழியா்கள், அலுவலா்கள் போராட்டம்

26th Sep 2022 11:45 PM

ADVERTISEMENT

 

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் ஊழியா்கள், அலுவலா்கள், பொறியாளா்கள் அடங்கிய தமிழ்நாடு மின் வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது துணை மின் நிலையங்கள் மற்றும் சில பணிகளை ஒப்பந்த முறையில் விடுவதைத் திரும்பப் பெற வேண்டும். வாரிய ஆணைய எண் 2-ஐ ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு பொறியாளா் சங்கம் சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு எஸ். ராஜாராமன், காணிக்கைராஜ், தொழிலாளா் சம்மேளனம் முபாரக் பாட்சா, பொறியாளா் கழகம் மகாலிங்கம், அண்ணா தொழிற் சங்கம் டி.ஆா். முருகேசன், பொறியாளா் சங்கம் சுந்தா், ஐக்கிய சங்கம் ராகவன், ஏ.இ.எஸ்.யு. பழனிநாதன், அம்பேத்கா் சங்கம் ஸ்டாலின், ஐஎன்டியுசி பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT