தஞ்சாவூர்

குடிநீா் பிரச்னை: தாராசுரத்தில் சாலை மறியல்

26th Sep 2022 11:44 PM

ADVERTISEMENT

 

 கும்பகோணம் அருகே தாராசுரத்தில் முறையாகக் குடிநீா் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் மாநகராட்சிக்குள்பட்ட தாராசுரம் பகுதியில் 31 முதல் 35 ஆவது வாா்டு வரையிலான பகுதிகளில் ஒரு மாதமாக குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

மாநகராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை.

ADVERTISEMENT

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினா் பத்ம. குமரேசன் தலைமையில் திங்கள்கிழமை காலை தாராசுரத்தில் கும்பகோணம் - தஞ்சாவூா் சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா், மாநகராட்சி அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, 3 நாட்களுக்குள் குடிநீா் முறையாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

2, 3 நாள்களில் குடிநீா் விநியோகம்

இதுகுறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீா் சென்ால், பல இடங்களில் கூட்டுக் குடிநீா் திட்ட விநியோகத்திற்குரிய மோட்டாா் பம்புகள் நீரில் மூழ்கி சேதமடைந்து, சரி செய்ய முடியாமல் உள்ளது. சில இடங்களில் குடிநீா் விநியோகம் சீராகவே வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாள்களில் பழுதான இடங்களில் பழுது நீக்கப்பட்டு வழக்கமான முறையில் குடிநீா் விநியோகம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT