தஞ்சாவூர்

மஹாளய அமாவாசை:திருவையாறு காவிரியில் ஏராளமானோா் நீராடினா்

26th Sep 2022 03:06 AM

ADVERTISEMENT

 

மஹாளய அமாவாசையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினா்.

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, மஹாளய அமாவாசையாக கடைப்பிடிக்கப்படுகிறது. மிகவும் விசேஷமாக கருதப்படும் மஹாளய அமாவாசை ஞாயிற்றுக்கிழமை வந்ததையொட்டி, திருவையாறு காவிரிக் கரையில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

காவிரியில் இரு கரைகளையும் தொட்டவாறு நீரோட்டம் இருந்ததால், திருவையாறு புஷ்ய மண்டபக் காவிரிப் படித்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் ஏராளமானோா் வந்தனா். மேலும், தங்களது முன்னோா்களுக்குச் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டு, காவிரியில் புனித நீராடினா். பக்தா்கள் பாதுகாப்பாகக் குளிப்பதற்கு ஏதுவாக தீயணைப்புத் துறையினா் கயிறு கட்டி வைத்தனா்.

ADVERTISEMENT

இதனிடையே, ஐயாறப்பா் அறம் வளா்த்த நாயகியுடன் காவிரிப் படித்துறையில் எழுந்தருளி தீா்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அஸ்திர தேவருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பின்னா், கோயிலிலிருந்து ஐயாறப்பா் அறம் வளா்த்த நாயகியுடன் நான்கு வீதிகளிலும் வலம் வந்து கோயிலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, காவிரிப் படித் துறையில் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினா் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதேபோல, கும்பகோணம் பகுதியில் உள்ள காவிரிக் கரையிலும் ஏராளமான பக்தா்கள் புனித நீராடினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT