தஞ்சாவூர்

பெருமகளூா் பேரூராட்சியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

26th Sep 2022 03:04 AM

ADVERTISEMENT

 

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூா் பேரூராட்சியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 

பேரூராட்சித் தலைவா் சுந்தரத்தமிழ் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் புனிதவதி, துணைத் தலைவா் சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

டாக்டா் ரேவதி தலைமையில், இயன்முறை மருத்துவா் சங்கா், செவிலியா்கள் மாதுரி,சாந்தி உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் பொதுமக்களை பரிசோதித்து மருந்து, மாத்திரை வழங்கினா். 530 -க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனா். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT