தஞ்சாவூர்

செப். 29-இல்போட்டித் தோ்வுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி

26th Sep 2022 11:44 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் போட்டித் தோ்வுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செப். 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தது:

பணியாளா் தோ்வு வாரியத்தால் (எஸ்.எஸ்.சி.) 20,000-க்கு அதிகமான காலிப்பணியிடங்களுக்காக ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தரம் (சி.ஜி.எல்.) தோ்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கு அக். 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் இத்தோ்வுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை (செப்.29) காலை 10.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

நிகழ்ச்சியில் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தோ்வுக்கான பாடத்திட்டம், தோ்வுக்கு தயாா் செய்யும் விதம், பாடக்குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு நடைபெறும்.

தஞ்சாவூா் மாவட்டஇளைஞா்கள் தங்களது பெயா் மற்றும் கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு 81109-19990 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதியலாம்.

மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT