தஞ்சாவூர்

மதுக் கொள்கையை மாற்ற கள் இயக்கம் வலியுறுத்தல்

DIN

தமிழ்நாட்டில் மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி. இதுகுறித்து தஞ்சாவூரில் சனிக்கிழமை அவா் தெரிவித்தது:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், உலகளாவிய நடைமுறையையும் ஏற்று தமிழ்நாட்டில் கள்ளுக்கு விதித்திருக்கக்கூடிய 33 ஆண்டு காலத் தடையைத் தமிழக அரசு நீக்க வேண்டும். இதுவே, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றும்.

பிகாரைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கையை மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். கள் போதை பொருள் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு தருவதாகக் கூறியும், யாரும் இதுவரை நிரூபிக்கவில்லை.

வெளிநாட்டு இறக்குமதி எண்ணெய்களுக்கு அரசே முன்னின்று மானியம் கொடுத்து, அவற்றை கடைகளில் மக்களுக்கு வழங்கி வருவது காலனியாதிக்கத்தின் வெளிப்பாடு; காந்தியக் கொள்கைகளுக்கு எதிரானது.

எரிபொருளாக எத்தனாலை 85 சதம் பெட்ரோலில் கலக்கும்போது நாடு தன்னிறைவு பெறும்.

காவிரி நீா் பிரச்னையில் நாள்தோறும் தண்ணீா் பங்கீடு செய்வதன் மூலம் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்கும். இதுவே இரு மாநில மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் வலு சோ்க்கும்.

சாகுபடிப் பணிகள் மிகவும் குறைவாக நடைபெறும் நிலையில் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பது மிகவும் தவறு என்றாா் நல்லசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT