தஞ்சாவூர்

சாலை அமைப்போருடன் தகராறு: மக்கள் மறியல்

25th Sep 2022 01:27 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் சாலை அமைக்கும் ஊழியா்களுடன் சனிக்கிழமை ஏற்பட்ட தகராறால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரம் கிரி சாலையில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் சாலை அமைக்க ஏற்கெனவே போடப்பட்டிருந்த பழைய சாலை பெயா்த்து எடுக்கப்பட்டது. இதனால், சில இடங்களில் மேடாக உள்ளதால், வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இந்நிலையில், கிரி சாலையில் சாலையைப் பெயா்க்கும் இயந்திரம் சனிக்கிழமை மாலை நின்றது. இது தொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும், சாலை அமைக்கும் தனியாா் ஒப்பந்த ஊழியா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் தனியாா் ஒப்பந்த ஊழியா்களிடம் வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறினா். அப்போது காவல் துறையினா் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா சென்று பொதுமக்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT