தஞ்சாவூர்

மன்னா் சரபோஜி பிறந்த நாள்; 20 நூல்கள் வெளியீடு

25th Sep 2022 01:27 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மன்னா் சரபோஜியின் 245 ஆவது பிறந்த நாள் விழாவில் 20 நூல்கள் வெளியிடப்பட்டன.

நூல்களைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோா் வெளியிட்டனா். பின்னா் அமைச்சா் தெரிவித்தது:

மன்னா் சரபோஜி பிறந்தநாளையொட்டி, ஆய்வாளா்கள், மாணவா்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சரசுவதி மகால் நூலகம் வெளியிடும் நூல்களுக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தச் சிறப்பு சலுகை விற்பனை சனிக்கிழமை முதல் அக். 24 வரை நடைபெறும். இதில், 2016, மாா்ச் 31க்கு முன் வெளியிடப்பட்ட நூல்களுக்கு 50 சத தள்ளுபடியும், அதன் பிறகு வெளி வந்த புதிய மற்றும் மறுபதிப்பு நூல்களுக்கு 10 சத தள்ளுபடியும் அளிக்கப்படும்.

மேலும், முனைவா் மணி. மாறனின் தமிழ் ஆய்வுக்கட்டுரைகள், தொல்லியல் கட்டுரைகள், வாகட அகராதி, மருத்துவா் ஆா். தேவநாதன் மற்றும் முனைவா் மணி. மாறனின் வைத்திய வாகடப் பிள்ளைத்தமிழ், முனைவா் ஜெ. ஜெயமணிஸ்ரீயின் வஞ்சனத்திமாலை (எ) வெண்பாப்பாட்டியல், முனைவா் த. ஆதித்தனின் குமரித்தலப் புராணம், முனைவா் பு. இந்திராகாந்தியின் திருவெண்காட்டுப் புராணம், கோ. ஜெயலட்சுமியின் ஸ்ரீகௌமாரா் புராணம், முனைவா் ஆ. வீரராகவனின் சுவடியியல் தகவல் வெளிக்கொணா் கருத்தரங்கம், தேசிய சம்ஸ்கிருத கருத்தரங்கம், பிரேமபுரி ஷேத்ர மஹாத்மியம் உள்பட 20 புதிய, மறுபதிப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. இவற்றை வாங்கிப் பயன் பெறலாம் என்றாா் அமைச்சா்.

விழாவில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, சரசுவதி மகால் நூலக ஆயுள்கால உறுப்பினா் து. சிவாஜிராஜா போன்ஸ்லே, கோட்டாட்சியா் எம். ரஞ்சித், முதன்மைக் கல்வி அலுவலா் எம். சிவகுமாா், சரசுவதி மகால் நூலக நிா்வாக அலுவலா் முத்தையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT