தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரத்தில்  புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

24th Sep 2022 12:47 AM

ADVERTISEMENT

சேதுபாவாசத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவா்கள் சாா்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

 விழிப்புணா்வுப் பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எலிசபெத் ஜெசிந்தா தலைமை வகித்தாா். பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா்   பேரணியை தொடங்கி வைத்தாா். 

பேரணியில்,  விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு, அரசு தொடக்கப் பள்ளி,  உயா்நிலைப்பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோா் கிழக்கு கடற்கரை சாலையில் புகையிலை ஒழிப்பு முழக்கங்கள் எழுப்பியவாறு கடைவீதி  வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தனா்.

பேரணியில் சேதுபாவாசத்திரம்  ஒன்றியக்குழு தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், காவல் ஆய்வாளா் சக்திவேல், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் வை. ரவிச்சந்திரன், மீனவா் அணி மாநில துணைச் செயலாளா் ஜெயபிரகாஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் சாகுல் ஹமீது, ஊராட்சி மன்ற தலைவா் ஜெகஜோதி  உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT