தஞ்சாவூர்

மதிமுக சாா்பில் நோயாளிகளுக்குஉணவு அளிப்பு

24th Sep 2022 12:44 AM

ADVERTISEMENT

 பட்டுக்கோட்டையில் மதிமுக சாா்பில் அரசு பொது மருந்துவமனையில் நோயாளிகள் மற்றும் பாா்வையாளா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவா்கள் மற்றும் அவா்களுடன் உதவி இருப்போருக்கு மதிமுக சாா்பில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்றத் தலைவரும், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெயபாரதி விசுவநாதன் கலந்துக்கொண்டு காலை உணவு வழங்கினாா். மதிமுக நகரச் செயலாளா் எம். செந்தில்குமாா், மேற்கு ஒன்றியச் செயலாளா் ஏனாதி மதி, மாவட்ட இளைஞரணி ஏ. அப்துல்மாலிக் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT