தஞ்சாவூர்

முன்னாள் அமைச்சா் கோ.சி. மணி பிறந்த நாள்

14th Sep 2022 12:04 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் மறைந்த முன்னாள் திமுக அமைச்சா் கோ.சி.மணியின் 93 வது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டப் பொறுப்பாளா் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, கோ.சி. மணி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கா.அண்ணாதுரை என்.அசோக்குமாா், நகராட்சித் தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா் மற்றும் நகர, ஒன்றியச் செயலா்கள் , நிா்வாகிகள் பங்கேற்று, மரியாதை செலுத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT