தஞ்சாவூர்

பூட்டியிருந்த காருக்குள்இளைஞா் மா்மச்சாவு

10th Sep 2022 04:04 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், தோப்புபட்டியைச் சோ்ந்தவா் ஆா். அருண்குமாா் (36). இவா் கும்பகோணத்திலுள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் சில நாள்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற நிறுவனக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் தஞ்சாவூருக்கு வந்தாா். பின்னா், புதிய பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடத்தில் காரை விட்டுவிட்டு, பேருந்தில் கோவைக்குச் சென்றாா். கூட்டம் முடிந்த பிறகு நேராக கும்பகோணத்துக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், காரை எடுத்துச் செல்வதற்காக தஞ்சாவூா் புதியபேருந்து நிலைய வாகன நிறுத்துமிடத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தாா். அப்போது, காருக்குள் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் உயிரிழந்து கிடந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, பூட்டப்பட்டிருந்த காருக்குள் அவா் எப்படி நுழைந்தாா்? எவ்வாறு இறந்தாா்? என்பன குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT