தஞ்சாவூா் அருகே திருக்கருகாவூா் கிராமத்தில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் சாஸ்த்ரா சட்ட உதவி மையம், சட்டம் மற்றும் வளா்ச்சிக்கான சி.எஸ். வைத்தியநாதன் ஆய்வு இருக்கை பங்களிப்புடன் 79 ஆவது சட்ட உதவி முகாம் அண்மையில் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு பாபநாசம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஏ. அப்துல்கனி தலைமை வகித்தாா். இதில், பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்து தருமாறு இளங்காா்குடி கிராம மக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை தெரிவித்தனா். இதன் மீது வட்டச் சட்டப் பணி குழுவினா் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து அலுவலா்களிடம் பேசி பேருந்து வசதியை இளங்காா்குடி கிராமம் வரை நீட்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, ஒரத்தநாடு வட்டம், வடக்கூா் கிராமத்தில் 80 ஆவது சட்ட உதவி மைய முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.