தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே நாளை மின் தடை

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகேயுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.6) மின்சாரம் இருக்காது.

கும்பகோணம் சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளால் மருதாநல்லூா், திப்பிராஜபுரம், மாடாகுடி, நாகரசம்பேட்டை, மங்கம்மாள்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்சாரம் இருக்காது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக கும்பகோணம் தெற்கு உதவிச் செயற் பொறியாளா் க. சங்கா் இதைத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT