தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் நாளை எரிவாயு குறைதீா் கூட்டம்

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.6) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தது:

பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோரின் குறைகளைத் தீா்க்கும் வகையில் குறைதீா் கூட்டம் கூடுதல் ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்துக்குள்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோருக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் நுகா்வோா் வங்கிக் கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றிலுள்ள குறைகள் குறித்து வரப்பெறும் புகாா்களை உரிய நடவடிக்கை எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிகளுக்குள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீா்படுத்த இக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

எனவே, எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா் தங்களது குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT