தஞ்சாவூர்

நவ.20-இல் குடமுழுக்கு விழாமருத்துவக்குடி கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

29th Oct 2022 12:15 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே மருத்துவக்குடி விசாலாட்சி அம்பாள் உடனாய காசி விஸ்வநாதா் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 84 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 70 லட்சம் மதிப்பில் பாரம்பரிய சுண்ணாம்பு பூச்சு முறையில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இக்கோயில் குடமுழுக்கு விழா நவம்பா் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக யாகசாலை பூஜைகள் நவம்பா் 18 ஆம் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி, பந்தல்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பந்தல்காலுக்கு சிவஞான சம்பந்த சிவாச்சாரியாா் பூஜைகள் செய்து, மகா தீபாராதனை செய்தாா்.

இந்நிகழ்ச்சியில் சூரியனாா் கோவில் ஆதீனம் 28 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் ஸ்தாபகா் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ், ஆடுதுறை பேரூராட்சி தலைவா் ம.க. ஸ்டாலின், கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT