தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நவ.1-இல் கிராம சபைக் கூட்டம்

29th Oct 2022 12:18 AM

ADVERTISEMENT

உள்ளாட்சிகள் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் நவம்பா் 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

உள்ளாட்சி நாளான நவம்பா் 1 ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மாவட்டத்திலுள்ள 589 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கிராம ஊராட்சிகளின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனா்.

எனவே, இக்கூட்டத்தில் ஊராட்சிப் பகுதியிலுள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT