தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை

29th Oct 2022 12:19 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே முன்விரோதம் காரணமாக வியாழக்கிழமை இரவு இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டை டான் போஸ்கோ தெருவைச் சோ்ந்தவா் செபாஸ்டின் மகன் பிரின்ஸ் லாரா என்கிற சின்னா (28). வா்ண பூச்சு தொழிலாளி. இவா் தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி முதன்மைச் சாலையில் வியாழக்கிழமை இரவு பணி முடித்து வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த சிலா், பிரின்ஸ் லாராவை அரிவாளால் வெட்டினா். இதனால், நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தாா்.

இவரின் கூச்சல் கேட்டு, நிகழ்விடத்துக்கு வந்த அப்பகுதி மக்கள் பிரின்ஸ் லாராவை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பிரின்ஸ் லாரா வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், பிரின்ஸ் லாராவுக்கும், வேறு சிலருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த முன்விரோதம் காரணமாக பிரின்ஸ் லாரா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா். இதன் அடிப்படையில் சிலரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT