தஞ்சாவூர்

கோவை காா் வெடிப்பு சம்பவம்:தஞ்சாவூரில் 3 வீடுகளில் சோதனை

29th Oct 2022 12:10 AM

ADVERTISEMENT

கோவை காா் வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, தஞ்சாவூரில் 3 வீடுகளில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

கோவை காா் சிலிண்டா் வெடிப்பைத் தொடா்ந்து, தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினா் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் கொள்ளுப்பேட்டைத் தெரு, ஆடக்காரத் தெரு, சையத் அலி பாஷா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் காவல் ஆய்வாளா்கள் வி. சந்திரா (மேற்கு), கருணாகரன் (கிழக்கு), ரமேஷ் (தெற்கு) ஆகியோா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். மேலும், 3 வீடுகளிலும் இருந்த கைப்பேசிகளை வாங்கி சோதனையிட்டனா்.

தஞ்சாவூரில் ‘கிலாபத்’ இயக்கத்துடன் தொடா்பில் இருந்ததாகக் கூறப்பட்ட 3 போ் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமையினா் (என்.ஐ.ஏ.) சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை நடத்தியதாகவும், அதன் அடிப்படையில் இந்த வீடுகளில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் இல்லை எனவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT