தஞ்சாவூர்

கும்பகோணம் மாமன்ற அவசரக் கூட்டம்: அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் தா்னா

29th Oct 2022 12:12 AM

ADVERTISEMENT

கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மாமன்ற அவசரக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் இருவா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கூட்டம் மேயா் க. சரவணன் தலைமையிலும், துணை மேயா் சு.ப. தமிழழகன், ஆணையா் ம. செந்தில் முருகன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில், தீா்மானம் வாசித்துக் கொண்டிருந்தபோது அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆா். ஆதிலட்சுமி (19 ஆவது வாா்டு, வா. கௌசல்யா (33 ஆவது வாா்டு) ஆகியோா் எங்கள் வாா்டில், வாா்டு குழு உறுப்பினா்கள் பட்டியல் வழங்கியுள்ளதை அங்கீகரிக்க வேண்டும் என்றும், அதன்படி பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் பேசினா்.

அதற்குள் கூட்டம் முடிந்து விட்டதாகக் கூறி மேயரும், துணை மேயரும் எழுந்து சென்றனா். இதனால், அதிருப்தியடைந்த ஆதிலட்சுமியும், கௌசல்யாவும் தங்களுக்கு உரிய விளக்கத்தை மாமன்றம் தெரிவிக்கவில்லை எனக் கூறி திடீரென தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், இவா்களது ஆதரவாளா்களும் மாநகராட்சி அலுவலகம் முன் திரண்டு முழக்கங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் அழகேசன் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வாா்டு குழு பட்டியல் சனிக்கிழமை வெளியிடுவதாக மேயா், துணை மேயா் கூறியதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT