தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே நீதிமன்ற உத்தரவின்படி கோயில் இடிப்பு

29th Oct 2022 12:15 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு அருகே நீா்நிலை ஆக்கிரமிப்பிலிருந்த கோயில் நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

ஒரத்தநாடு வட்டம், சில்லத்தூா் தெற்கு கிராமவாசிகள் சோ்ந்து சுமாா் ரூ. 12 லட்சத்தில் இடும்பன் கோயிலை அப்பகுதியில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி கரையில் கட்டி, 2 மாதங்களுக்கு முன்னா் கோயில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

இந்தக் கோயில் நீா்நிலை பகுதியில் அமைந்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

கோயில் அரசுக்கு சொந்தமான நீா்நிலை ஆக்கிரமிப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து இக்கோயிலை இடிக்க நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT

இதன்பேரில், வெள்ளிக்கிழமை ஒரத்தநாடு வட்டாட்சியா் சுரேஷ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் விக்னேஷ், காவல் துணை கண்காணிப்பாளா் (பொ) பாலாஜி மற்றும் காவலா்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஜேஜிபி இயந்திரம் மூலம் கோயிலை இடித்து அகற்றினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT